கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடா தொகுதி, பாஜக பாராளுமன்ற உறுப்பினர், திரு. ஆனந்தகுமார் ஹெக்டே அவர்கள் BSNL நிறுவனத்தில் பணிப்புரியும் ஊழியர்களை தேச துரோகிகள் என விமர்சனம் செய்துள்ளார்.
10.08.2020 அன்று ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது, பிரதமர் ஏராளமான தொழில்நுட்பம் மற்றும் நிதி வழங்கியும், ஊழியர்கள் வேலை செய்வதில்லை என குற்றம் சாட்டியுள்ளார். BSNL நிறுவனத்தின் சேவை நாட்டுக்கே களங்கம் ஏற்படுத்துவதாக பேசியுள்ளார். நிறுவனத்தை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும், அனைத்து ஊழியர்களும் விரைவில் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள் என்றும் கொக்கரித்துள்ளார்.
MP அவர்களின் ஆணவப் பேச்சை கண்டித்து நமது சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும், 12.08.2020, புதன்கிழமை அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவேண்டும் என தோழமையுடன் கேட்டு கொள்கிறோம். தமிழ் மாநில AUAB நாளை மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த அறைகூவல் விடுத்துள்ளது.
சேலம் நகர கிளைகள் சார்பாக, 12.08.2020 அன்று காலை 10.30 மணிக்கு, கண்டன ஆர்ப்பாட்டம் சேலம் GM அலுவலகத்தில் நடைபெறும்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
தமிழ் மாநில AUAB சுற்றறிக்கை காண இங்கே சொடுக்கவும்
அகில இந்திய AUAB பத்திரிக்கை செய்தி காண இங்கே சொடுக்கவும்