Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, August 24, 2020

ஒப்பந்த ஊழியர்களுக்காக உண்ணாவிரதப் போராட்டம்

திருப்பூர் எம்.எல்.ஏ. திடீர் ...


ஒப்பந்த ஊழியர்களின் ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும், OUTSOURCING முறை மூலம் ஒப்பந்த ஊழியர்களை ஆட்குறைப்பை செய்யாதே மற்றும் BSNL வழங்கியுள்ள பணம் முறையாக ஒப்பந்தக்காரர் செலவிட்டனரா என்பதை உறுதி செய்திட வேண்டும் என வலியுறுத்தி, 2020 ஆகஸ்ட் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த ஒப்பந்த ஊழியர் சங்கங்களின் மத்திய கூட்டமைப்பான, BSNLCCWF போராட்ட அறைகூவல் கொடுத்துள்ளது. 

BSNLEU மத்திய சங்கம் தனது முழு ஆதரவை இந்த போராட்டத்திற்கு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் BSNLEU-TNTCWU இணைந்து தொடர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

நமது மாவட்ட சூழலுக்கேற்ப, இரண்டு நாள் போராட்டத்தை நமது மாவட்டத்தில்  வெற்றி கரமாக்குவது சம்மந்தமாக, இரண்டு சங்கங்களின் இணைந்த மைய கூட்டம், கூடி விவாதித்தது. அதில், 25.08.2020, செவ்வாய்க்கிழமை அன்று மாவட்டம் தழுவிய உண்ணாவிரத போராட்டமாக, சேலம் GM அலுவலகத்தில் போராட்டத்தை நடத்துவது என்றும், 26.08.2020 புதன்கிழமை அன்று கிளைகளில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. 

இரண்டு நாள் போராட்டமும் காலை 10.00 மணிக்கு துவங்கப்படவேண்டும். (26.08.2020 அன்று சேலம் நகர கிளைகள் சார்பாக, GM அலுவலகத்தில் போராட்டம் நடைபெறும்)
இந்த போராட்டத்தில், சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முக கவசம் அணிவது உள்ளிட்ட அனைத்து பாதுகாப்புகளையும் கடைபிடிக்க வேண்டும் எனவும் இரண்டு மாவட்ட சங்கங்களும் கேட்டுக் கொள்கிறது. 

அதே போல கோரிக்கை அட்டையையும், தட்டிகளையும் வைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறது. நமது மாவட்டத்தில் போராட்டத்தை வெற்றி பெறச்செய்ய அனைத்து தோழர்களும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.

போராட்ட வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர், BSNLEU 
M . செல்வம்,
மாவட்ட செயலர், TNTCWU