நமது சேலம் மாவட்ட சேம நல வாரிய கூட்டம் (WELFARE BOARD MEETING ) பல மாதங்களாக கூட்டப்படாமல் இருந்தது. நமது தொடர் அழுத்தம் காரணமாக, பல முறை கூட்டம் கூட்டப்பட்ட முயற்சி எடுக்கப்பட்டாலும், பல்வேறு காரணங்களால் கூட்டம் நடத்த படவில்லை. இறுதியாக, 07.08.2020 கூட்டம் கூட்டப்பட்டது. இன்று, 13.08.2020, கூட்ட முடிவுகள் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
நமது சேலம் மாவட்ட BSNLEU சார்பாக, சேம நல நிதிக்குழு உறுப்பினர் தோழர் M . விஜயன், (மாவட்ட உதவி தலைவர்), பல்வேறு கோரிக்கைகளுடன், கூட்டத்தில் கலந்து கொண்டார். நமது தரப்பு கோரிக்கைகள் அனைத்தும் கூட்டத்தில் ஏற்கப்பட்டது.
அதன்படி, கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்
01. சேம நல வாரிய குழு உறுப்பினர்களாக, 1.8.2020 அன்று சேலம் மாவட்டத்தில் பணியில் உள்ள ஊழியர்கள், அதிகாரிகளுக்கு ரூ. 7000.00 (ஏழாயிரம் மட்டும்) WELFARE GIFT தொகையாக வழங்கப்படும்.
02. மூக்கு கண்ணாடிக்கு வழங்கப்படும் WELFARE GRANT ரூ. 2500லிருந்து ரூ.4000 ஆக 01.08.2020 முதல் உயர்த்தப்படும்.
03. திருமண உதவி கடன் ரூ. 50,000லிருந்து ரூ.75,000 ஆக உயர்த்தப்படும்.
04. 31.08.2020 முதல் நடைபெறும் இலாக்கா பணி நிறைவு பாராட்டு விழாவில், விழாவில் கலந்து கொள்பவர்களுக்கு இனிப்பு, காரம், காபி சேம நல நிதியிலிருந்து வழங்கப்படும்.
05. கோராணா தொற்று பிரச்சனைக்கு உதவும் விதமாக ரூ.1500.00 மதிப்பிலான சுத்திகரிப்பான் (HAND SANITIZER) ஒவ்வொரு கோட்ட பொறியாளருக்கும் வழங்கப்படும். அவர், அவர் தம் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகத்திற்கு, அதை பிரித்து வழங்க ஆவண செய்வார்.
06. 20 வருடம், 30 வருடம் சேவை முடித்த ஊழியர்களுக்கு, அவர்கள் சேவையை கௌரவப்படுத்தும் விதமாக வழங்கப்படும் ரூ.2000.00 / ரூ.3000.00 ரொக்கம் மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
07. VRS2019ல் பணி நிறைவு செய்த 444 அதிகாரிகள்/ஊழியர்களுக்கு, வழங்க வேண்டிய பரிசு தொகை, ரூ. 3250ல் அவர்களுக்கான பாராட்டு விழா செலவு ரூ. 784.00 போக, ரூ.2,466.00 விரைவில் பட்டுவாடா செய்யப்படும்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
MINUTES காண இங்கே சொடுக்கவும்