காணொளி காட்சி மூலம் நடைபெற்ற BSNL ஊழியர் சங்கத்தின் மத்திய செயற்குழு பல முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளது.
BSNL ஊழியர் சங்கத்தின் இரண்டு நாட்கள் மத்திய செயற்குழு, 10.09.2020 மற்றும் 11.09.2020 தேதிகளில் காணொளி காட்சி மூலமாக நடைபெற்றது. மொத்தமுள்ள 56 மத்திய செயற்குழு உறுப்பினர்களில், 53 தோழர்கள் பங்கேற்றனர். அதில் 48 தோழர்கள் விவாதத்தில் பங்கேற்றனர். வலைத்தள பிரச்சனைகள் காரணமாக மற்ற தோழர்கள் கலந்துக் கொள்ள இயலவில்லை.
காணொளி காட்சி மூலம், BSNL ஊழியர் சங்கத்தின் மத்திய செயற்குழு நடைபெறுவது இதுதான் முதல் முறை. இந்த தொழில் நுட்பம் பல தோழர்களுக்கு புதியதானது. இருந்த போதும், தோழர்களின் பங்கேற்பும், விவாதமும் இந்த செயற்குழுவை வெற்றிகரமாக்கியுள்ளது. ஆழமான விவாதங்களுக்கு பின் கீழ்கண்ட விஷயங்களின் மீது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. BSNLக்கு 4G சேவை மறுக்கப்படுவதன் மீதும், அதற்கெதிரான சக்திவாய்ந்த பிரச்சாரமும், அதன் பின் வேலை நிறுத்தமும்.
2. பொதுத்துறை தனியார் மயமாக்கல் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளின் மீதான தாக்குதல்களுக்கு எதிராக...
3. BSNLன் பணத்தை கொள்ளையடிக்கும் OUTSOURCING முறை தொடர்பாக
4. ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நீக்கத்திற்கு எதிராகவும், அவர்களின் ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க வலியுறுத்தியும்...
5. நாட்டில் வளர்ந்து வரும் எதேச்சதிகாரம் மற்றும் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்திற்கு எதிராக உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய/மாநில சங்கங்கள்
விவரமான மத்திய சங்க அறிக்கை காண இங்கே சொடுக்கவும்
தமிழாக்கம் காண இங்கே சொடுக்கவும்