நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஒப்பந்த ஊழியர்களின் சம்பள நிலுவை சம்பந்தமாக மத்திய தொழிலாளர் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள், அவர்களிடம் நமது சங்கம் தயாரித்த உறுப்பினர்களின் சம்பள நிலுவை விவரங்களை வழங்க BSNLEU - TNTCWU தமிழ் மாநில சங்கங்கள் கோரியிருந்தது.
அதன் அடிப்படையில், BSNLEU - TNTCWU சேலம், தர்மபுரி மாவட்ட சங்கங்கள் சார்பாக, இன்று, 14.09.2020 சேலம் LEO அவர்களிடம் விவரங்கள் வழங்கப்பட்டது. ஒப்பந்த ஊழியர்களுக்கு பல மாத காலமாக, சம்பளம் வழங்கப்படாததை நாம் எடுத்துரைத்தோம். நமது விவரங்களை பெற்று கொண்டு, உரிய மேல் நடவடிக்கை, நீதி மன்ற தீர்ப்பு அடிப்படையில். எடுக்க ஆவண செய்வதாக, LEO உறுதி அளித்தார்.
சேலம், தர்மபுரி மாவட்ட சங்கங்கள் சார்பாக, நடைபெற்ற இந்த கூட்டு இயக்கத்தில், BSNLEU சேலம் மாவட்ட செயலர் தோழர் E . கோபால், மாவட்ட சங்க நிர்வாகி தோழர் சக்திவேல், செல்வம், TNTCWU தமிழ் மாநில உதவி செயலர் தோழர் C .பாஸ்கர், மாநில சங்க நிர்வாகி தோழர் P . ஸ்ரீதர், சேலம் மாவட்ட தலைவர் தோழர் K . ராஜன், மாவட்ட செயலர் தோழர் M . செல்வம், தர்மபுரி மாவட்ட செயலர் தோழர் M . சௌந்தர்ராஜன், சேலம் மாவட்ட சங்க நிர்வாகி தோழர் ராஜேந்திரன், தர்மபுரி மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் கார்த்திகேயன், குமார் BSNLEU இளம்பிள்ளை கிளை செயலர் தோழர் கந்தசாமி, TNTCWU கொண்டலாம்பட்டி கிளை செயலர் தோழர் ஜெய்சங்கர், ஊத்தங்கரை கிளை செயலர் தோழர் ஐயப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்