ஒப்பந்த ஊழியர்களை, பணி நீக்கம் செய்யும் நிர்வாகத்தின் எதேச்சதிகார உத்தரவை எதிர்த்து, மாநிலம் முழுவதும், (5.10.2020, 6.10.2020) கடந்த இரண்டு நாட்களாக போராட்ட இயக்கங்கள் நடைபெற்றது.
நமது மாவட்டத்தில், 5.10.2020 அன்று ஊரக கிளைகளிலும், 6.10.2020 அன்று நகர கிளைகள் சார்பாக, சேலம் மெயின் தொலைபேசி நிலையத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இன்று, 7.10.2020 இரண்டு மாநில சங்க நிர்வாகிகள், சென்னை CGMT அலுவலகத்தில், அடையாள உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர். நமது மாவட்டத்திலிருந்து தோழர் C. பாஸ்கர், மாநில உதவி செயலர், TNTCWU உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டார்.
நாளை, 8.10.2020, மாநிலம் முழுவதும் தோழர்கள் திரளாக சென்று, சென்னை CGMT அலுவலகத்தில், பெருந்திரள் முற்றுகை போராட்டம் நடத்த நாம் தயாரானோம்.
நம் போராட்டத்தை கண்டு அஞ்சு நடுங்கிய மாநில நிர்வாகம் நம்மை பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. GM(HR) பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். மாநில சங்கத்தின் சார்பாக தோழர் A.பாபு ராதாகிருஷ்ணன் CS, தோழர் K.சீனிவாசன் CT மற்றும் தோழர் M.பாபு ACS ஆகியோர் பங்கேற்றனர்.
நமது கோரிக்கைகளின் முக்கியமானதான, ஒப்பந்த தொழிலாளர்களை பணி நீக்கம் செய்வது தொடர்பாக, நமது ஆழ்ந்த எதிர்ப்பை பதிவு செய்தோம். அதற்கு நமது பொதுமேலாளர் பதிலளிக்கையில், தற்போது STATUS QUO MAINTAIN செய்ய வேண்டும் என்கின்ற RLC(C ) உத்தரவை கார்ப்பரேட் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளதாகவும், அங்கிருந்து பதில் வரும் வரை பணி நீக்கம் செய்யப்பட மாட்டாது என்று உறுதி அளித்தார்.
அதன் காரணமாக நாளை, சென்னை தலைமை பொது மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற இருந்த பெருந்திரள் முறையீடு ஒத்தி வைக்கப்படுகிறது என இரண்டு மாநில சங்கங்களும் முடிவு செய்துள்ளது.
தோழர்களே, இந்த ஒத்தி வைப்பு தற்காலிகமானது தான். நமது கோரிக்கைகளுக்கு மாறாக ஏதாவது நிர்வாகம் முடிவு செய்யும் என்றால், உடனடியாக நமது பெருந்திரள் முறையீடு நடைபெறும். எனவே நமது போராட்ட வாளின் கூர் மழுங்காமல் பார்த்துக் கொள்வோம். அதுவரை நமது கோபத்தீயை அக்கினிக் குஞ்சாக பாதுகாப்போம்.
தோழமையுடன்
E. கோபால் மாவட்ட செயலர், BSNLEU
P. செல்வம், மாவட்ட செயலர், TNTCWU
தகவல்: மாநில சங்கம்