Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, October 4, 2020

மாவட்ட செயற்குழு முடிவுகள்


29.09.2020 அன்று  மாவட்ட சங்கத்தின் செயற்குழு கூட்டம், சேலம் மெயின் தொலைபேசி நிலைய முதல் மாடியில், சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு தோழர் S. ஹரிஹரன், மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார். 

முதல் நிகழ்வாக, சங்க கொடியை  தோழர் M. விஜயன், மாவட்ட உதவி தலைவர் விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே ஏற்றி வைத்தார். தோழர் M. சண்முகம் மாவட்ட உதவி செயலர் அஞ்சலியுறை நிகழ்த்த, தோழர் K. ராஜன் மாவட்ட அமைப்பு செயலர் அனைவரையும் வரவேற்றார்.

ஆய்படு பொருள் ஏற்புக்குப்பின், தோழர் S. தமிழ்மணி, மாநில உதவி தலைவர் செயற்குழுவை முறைப்படி துவக்கி வைத்து துவக்கவுரை வழங்கினார். தோழர் E. கோபால், மாவட்ட செயலர் ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி விளக்கவுரை வழங்கினார்.  TNTCWU மாவட்ட செயலர் தோழர் M. செல்வம் வாழ்த்துறை வழங்கினார்.

பின்னர் தோழர் M. விஜயன் அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடத்தப்பட்டு, உணவு இடைவேளைக்காக, செயற்குழு ஒத்திவைக்கப்பட்டது.

உணவு இடைவேளைக்கு பின் கூடிய செயற்குழுவில், ஆய்படு பொருள்கள் மீது கிளை செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தார்கள்.  விவாதத்திற்கு பதில் அளித்து மாவட்ட செயலர் தொகுப்புரை வழங்கினார். தோழர் P. தங்கராஜ், மாவட்ட பொருளர், மாவட்ட சங்கத்தின் நிதி நிலை விவரங்களை விளக்கினார். 

செயற்குழு கூட்டத்தில் கீழ் கண்ட முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டது

1. தல மட்ட, வேலை மற்றும் சேம நல வாரிய குழுக்களுக்கு, (LOCAL COUNCIL, WORKS COMMITTEE, WELFARE COMMITTEE)  புதிய உறுப்பினர்கள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள்.

2. உறுப்பினர் எண்ணிக்கைக்கேற்ப கிளை சங்கங்களை மாற்றி அமைப்பது

3. கொரோனா பிரச்சனை காரணமாக, நடத்த முடியாமல் இருந்த, VRS2019 பணி நிறைவு பாராட்டு விழா, அக்டோபர் மூன்றாவது வாரத்தில் நடத்துவது, அவர்ளோடு, 2020 பிப்ரவரி முதல் செப்டம்பர் வரை ஓய்வு பெற்ற தோழர்களும்  கௌரவப்படுத்துவது.

4. AUAB கருப்பு தின போராட்டத்தை சேலம் மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்துவது 

5. ஒப்பந்த ஊழியர் தொடர் இயக்கங்களை வெற்றிகரமாக்குவது 

6. ஒப்பந்த ஊழியர்களை பணி நீக்கும் நிர்வாக நடவடிக்கைகளை தொடர் போராட்டங்கள் மூலம் தடுப்பது, நிலுவை ஊதியத்தை போராடி பெற்று தருவது

7. மாவட்ட செயற்குழு உறுப்பினர்களின் சமூக வலைதள உபோயோகிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தி, அதிகப்படுத்துவது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

தோழர் சக்திவேல் மாவட்ட அமைப்பு செயலர் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார் 

தோழமையுடன் 

E. கோபால், 

மாவட்ட  செயலர்