மத்திய அமைச்சகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் BSNL/MTNL ஆகியவற்றின் இண்டெர்நெட்/ப்ராட்பேண்ட், லேண்ட் லைன் மற்றும் LEASED LINEகளை பயன்படுத்துவதை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது.
அனைத்து அமைச்சகங்கள், மத்திய அரசின் இலாகாக்கள், பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய அரசின் சுயாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகள் அனைத்தும், BSNL மற்றும் MTNL நிறுவனங்களின் இண்டெர்நெட், ப்ராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் LEASED LINEகளை மட்டுமே பயன்படுத்துவதை கட்டாயமாக்கி உள்ள மத்திய அரசாங்கத்தின் முடிவை, தொலை தொடர்பு துறை தனது12.10.2020 தேதியிட்ட கடிதத்தின் மூலம் தெரிவித்துள்ளது.
மிகவும் காலதாமதமாக வந்துள்ளதென்றாலும், இந்த முடிவை BSNL ஊழியர் சங்கம் வரவேற்கிறது. பதாண்டுகளுக்கு முன்னர் இருந்தே, BSNL ஊழியர் சங்கமும், அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பும் இந்த கோரிக்கையை பலமுறை முன் வைத்து வந்தது. “Better delayed then Never” என நாம் திருப்தியடைவோம்.
பெரும்பாலான மத்திய அரசு இலாகாக்களும், பொதுத்துறை நிறுவனங்களும், ஏற்கனவே, BSNLன் லேண்ட்லைன்கள், ப்ராட்பேண்ட் மற்றும் LEASED LINE இணைப்புகளையே பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அவர்கள், பெரும்பான்மையாக தனியார் மொபைல் சேவைகளையே பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள், BSNL/MTNL மொபைல் சேவைகளை பயன்படுத்த வேண்டும் என அரசாங்கம் கட்டாயப்படுத்தவில்லை. இந்த மொபைல் சேவைகளின் யுகத்தில், அந்த சேவைகளை மட்டும் இந்த உத்தரவில் தவிர்த்திருப்பதற்கு, ஜியோவிற்கு சாதகம் புரிய வேண்டும் என்ற அரசின் அடிப்படையான நோக்கம் தான் காரணம். ரயில்வே உள்ளிட்ட பல அமைச்சகங்கள், ஏற்கனவே ஜியோவின் மொபைல் சேவையை பயன்படுத்துகின்றன.
எனவே, மத்திய அரசின் இந்த உத்தரவின் வரம்பிற்குள், மொபைல் சேவைகளையும் கொண்டு வர வேண்டும் என BSNLஊழியர் சங்கம் மத்திய அர்சாங்கத்தை கேட்டுக் கொள்கிறது.