கடலூர் மாவட்டத்தில் நியாயத்திற்காக போராடி வரும் ஒப்பந்த தொழிலாளர்களில் 50 பேரையும், BSNL ஊழியர் சங்கத்தின் கடலூர் மாவட்ட செயலர் தோழர் சம்பந்தம் அவர்களையும், நிர்வாகத்தின் தூண்டுதலால், காவல்துறை கைது செய்ததை கண்டித்து அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்த BSNLEU தமிழ் மாநில சங்கம் அறைகூவல் கொடுத்தது.
அதன்படி, நமது சேலம் மாவட்டத்தில் BSNLEU & TNTCWU இரண்டு சங்கங்கள் சார்பாக, 03.11.20 செவ்வாய்க்கிழமை இன்று, அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் நகரம், திருச்செங்கோடு, ஆத்தூர், பரமத்தி வேலூர், நாமக்கல், ராசிபுரம் கிளைகள் அனுப்பிய படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
குறிகிய கால இடைவேளையில் கொடுக்கப்பட்ட்ட அறைகூவலை செவ்வனே நிறைவேற்றிய கிளைகளுக்கு இரண்டு மாவட்ட சங்கங்கள் சார்பாக வாழ்த்துக்கள்.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர், BSNLEU
M. செல்வம்,
மாவட்ட செயலர், TNTCWU
சேலம் நகரம்