அனைவருக்கும் BSNLEU - TNTCWU சேலம் மாவட்ட சங்கங்கள் சார்பான இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
மத்திய அரசாங்கமும், BSNL நிர்வாகமும் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் தர மறுத்து வஞ்சித்தபோது, BSNLEU - TNTCWU இரண்டு சங்கங்கள் மட்டுமே தன்னிகரில்லா தொடர் போராட்டங்களை நடத்தி, தொழிலாளர் நல துறையில் முறையிட்டு, உயர்நீதி மன்றம் சென்று சாதனை படைத்துள்ள விதத்தில் இந்த தீபாவளி முக்கியத்துவம் வாய்ந்த தீபாவளி தான்.
நமக்கு கிடைக்க வேண்டிய நியாயமான ஊதியத்தை இன்று ஒரு பகுதியாவது பெற்றுள்ளோம். ஒப்பந்த ஊழியர்களுக்கு தீபாவளிக்கு முன் 40,000 பட்டுவாடா செய்ய வேண்டும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பு அமலாக துவங்கியுள்ளது.
அடுக்கப்பட்ட மூட்டையில், அடி மூட்டையான ஒப்பந்த தொழிலாளி இன்று சற்று நிம்மதி பெருமூச்சு விடலாம் என்று சொன்னால் அது மிகையாகாது.இன்னும் நாம் அடையவேண்டிய விஷயங்கள் ஏராளம், என்ற உணர்வோடு மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம். முன்முயற்சி எடுத்த BSNLEU - TNTCWU தமிழ் மாநில சங்கங்களுக்கு புரட்சிகரமான தோழமை வாழ்த்துக்களை நன்றியுடன் உரித்தாக்குகிறோம்.
ஒட்டுமொத்த தேசமும் இந்திய தொழிலாளி வர்க்கமும் சந்திக்கும் சவால்களை முறியடிக்க எதிர்வரும் 26.11.2020 ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் முழுமையாக கலந்து கொள்வோம்.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர், BSNLEU
M. செல்வம்,
மாவட்ட செயலர், TNTCWU