பொதுத்துறை நிறுவன ஊழியர்களின் IDAவை மத்திய அரசு முடக்கம்- அரசின் முடிவிற்கு BSNL ஊழியர் சங்கம் கண்டனம்
மத்திய பொதுத்துறை நிறுவன ஊழியர்களின் IDAவை முடக்கி வைத்து, மத்திய அரசு ஒரு கொடூரமான உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் 01.10.2020 முதல் வரவேண்டிய IDA உயர்வு தரப்படமாட்டாது. அதே போல 01.01.2021 மற்றும் 01.04.2021 ஆகிய தேதிகளில் வரவேண்டிய IDA உயர்வும் வழங்கப்பட மாட்டாது. இந்த மூன்று தவணை IDAவும் 01.07.2021 முதல் வழங்கப்படும். ஆனால் அதற்கான நிலுவை தொகை வழங்கப்பட மாட்டாது. இது தொழிலாளர்களின் பணத்தை அரசாங்கம் களவாடுவதற்கு சமமானது. அரசாங்கத்தின் இந்த கொடூரமான முடிவை BSNL ஊழியர் சங்கம் கடுமையாக கண்டிக்கின்றது.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல் மத்திய மாநில சங்கங்கள்