01.10.2020, 01.01.2021 மற்றும் 01.04.2021 ஆகிய தேதிகளில் பொதுத்துறை ஊழியர்களுக்கு வரவேண்டிய மூன்று தவணை IDAவை முடக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. இந்த மூன்று தவணை IDAக்களும் 01.07.2021 முதல் மீண்டும் வழங்கப்படும். ஆனால் நிலுவை தொகை வழங்கப்பட மாட்டாது.
இந்த IDA முடக்கத்தை, BSNLல் உள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான, AUAB கண்டிக்கின்றது. இது BSNL ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை ஊழியர்களின் வயிற்றில் அடிக்கும் செயலே தவிர வேறு எதுவும் இல்லை. எனவே இந்த IDA முடக்கத்திற்கு எதிராக, 25.11.2020 அன்று மதிய உணவு இடைவேளையில் ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டும் என AUAB அறைகூவல் கொடுத்துள்ளது.
அதன்படி நமது மாவட்டத்திலுள்ள அனைத்து கிளைகளிலும், 25.11.2020 அன்று மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்த, சேலம் மாவட்ட AUAB சார்பாக கேட்டு கொள்கிறோம். சேலம் நகர கிளைகள் சார்பாக, 25.11.2020 அன்று மதியம் 12 மணி அளவில் சேலம் GM அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.