01.10.2020, 01.01.2021 மற்றும் 01.04.2021 ஆகிய மூன்று தவணை பஞ்சப்படிகளை மத்திய அரசு முடக்கி சமீபத்தில் உத்தரவு வெளியிடப்பட்டிருந்தது. இந்த பஞ்சப்படி முடக்க உத்தரவு மத்திய பொதுத்துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் ஊழியர்களுக்கு பொருந்தாது என்று மத்திய பொதுத்துறைக்கான இலாக்கா ( Department of Public Enterprises ) தெளிவு படுத்தியிருந்தது. இதே போன்று கேரள உயர் நீதி மன்றமும் கர்னாடாக உயர் நீதி மன்றமும் பஞ்சப்படி முடக்க உத்தரவு அதிகாரிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் ஊழியர்களுக்கு பொருந்தாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளன.
இவைகளை சுட்டிக்காட்டி 01.10.2020 முதல் BSNL ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பஞ்சப்படியை உடனே வழங்க வேண்டும் என்று நமது அகில இந்திய சங்கம், BSNL CMD க்கு கடிதம் எழுதியுள்ளது. மேலும் இந்தப் பிரச்னை சம்பந்தமாக நீதி மன்றத்தை நாடலாமா என்றும் BSNLEU அகில இந்திய சங்கம் ஆலோசித்து வருகின்றது. கேரள உயர் நீதி மன்றம் தான் முதன் முதலில் பஞ்சப்படி முடக்கத்திற்கு எதிராக உத்தரவு வெளியிட்டதால், BSNLEU கேரள மாநிலச் செயலர் தோழர் சந்தோஷ்குமார் அவர்களை நீதி மன்றம் செல்வது சம்பந்தமாக உரிய முன் முயற்சிகளை செய்யுமாறு அகில இந்திய சங்கம் பணித்துள்ளது.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய மாநில சங்கங்கள்