DoTயின், BSNL விரோத கட்டளைகளுக்கு அடிபணிந்தது
57,400 4G இடங்களுக்கான கருவிகள் வாங்குவதற்கான விருப்பம் தெரிவிக்கும் மனுக்களுக்கு, BSNL நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. ’சுயசார்பு இந்தியா’ திட்டத்தின் கீழ் தகுதி படைத்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என BSNL நிர்வாகம் 01.01.2021 தேதியிட்ட 14 பக்க அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் ‘MAKE IN INDIA' திட்டத்தின் கீழ் வரும் நிறுவனங்களுக்கு எதிர் வரும் 4G டெண்டரில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
BSNLக்கு சமதளப்போட்டியை மறுத்து, DoT முன்வைத்துள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் BSNL நிர்வாகம் ஏற்றுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கேந்திரமான கருவிகள், இந்திய தயாரிப்பாக இருக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதை நாம் மேலும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். தனியார் நிறுவனங்கள் அனைத்தும், பன்னாட்டு நிறுவனங்களிடம் வாங்கும் போது, BSNLக்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சம்? இந்த டெண்டரில் “SYSTEM INTEGRATOR"களும் பங்கேற்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முறை அதிக செலவு பிடிக்கும் என்பதால், இதனை BSNL ஊழியர் சங்கமும் AUABயும் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல் மத்திய மாநில சங்கங்கள்