Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, January 16, 2021

கேரள மாநில முதல்வர் பாரத பிரதமருக்கு கடிதம்


BSNL நிறுவனம் விரைவில் 4G சேவை துவக்குவதை உறுதி செய்ய வலியுறுத்தி கேரள மாநில முதல்வர், தோழர் பினராயி விஜயன், பாரத பிரதமருக்கு கடிதம்


4G சேவை துவக்குவதை BSNL நிறுவனம் தாமதித்து வருவதால், நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் ஆழ்ந்த கவலையில் உள்ளனர். இந்த தாமதத்தால், BSNL வாடிக்கையாளர்கள், பல சங்கடங்களை சந்தித்து வருகின்றனர். 

அவர்களுடைய கருத்துக்களை எதிரொலிக்கும் வகையில், கேரள மாநில முதலமைச்சர் தோழர் பினராயி விஜயன், BSNL நிறுவனம், 4G சேவைகளை விரைவில் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாரத பிரதமர் திரு நரேந்திர மோடியை வலியுறுத்தி ஒரு கடிதம் எழுதியுள்ளார். 

இத்தகைய நல்லதொரு நடவடிக்கையை மேற்கொண்ட கேரள மாநில முதலமைச்சர் தோழர் பினராயி விஜயன் அவர்களுக்கு BSNLEU தனது நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறது.

தோழமையுடன் 
E. கோபால், 
மாவட்ட செயலர் 

தகவல்: மத்திய மாநில சங்கங்கள்