நிறுவனத்தின் வளர்ச்சி தொடர்பாக, தொடர்ச்சியான கால இடைவெளிகளில் அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரிகளின் சங்கங்களோடு விவாதிக்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம், 07.01.2021 அன்று, CMD BSNLக்கு கடிதம் எழுதியது. இதற்கு முந்தைய CMD BSNLகளின் காலகட்டங்களில் இது போன்ற கூட்டங்கள் நடைபெற்றுள்ளதையும், BSNLஊழியர் சங்கம் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தது.
இந்த கடிதத்திற்கு, 11.01.2021 அன்று CMD BSNL பதிலளித்திருந்தார். அந்தக் கடிதத்தில் நிறுவனத்தின் வளர்ச்சியில், ஊழியர்களின் பங்களிப்பினை CMD BSNL பாராட்டியிருந்தார். ஆனால், சங்கங்களோடு விவாதிக்க வேண்டும் என்கின்ற நமது கோரிக்கைக்கு, ஒரு தெளிவற்ற பதிலை அளித்திருந்தார்.
எனவே தொடர்ச்சியான கால இடைவெளிகளில் கூட்டங்கள் தேவை என்பதை மற்றும் கோராமல், அத்தகைய முதல் கூட்டத்திற்கு தேதி குறிப்பிட்டு தெரிவிக்கும் படியும் வலியுறுத்தி, BSNL ஊழியர் சங்கம் மீண்டும் ஒரு கடிதத்தை CMD BSNLக்கு எழுதியுள்ளது.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல் மத்திய மாநில சங்கங்கள்