இந்த நிதியாண்டான 2020-2021ல் முதல் அரையாண்டில், BSNL மற்றும் MTNL ஆகிய இரு நிறுவனங்களும் வரிக்கு முந்தைய வருமானத்தில் (EBITDA) லாபம் ஈட்டியுள்ளதாக, 11.01.2021 அன்று DoT வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தி தெரிவிக்கின்றன. (வரிக்கு முந்தைய வருமானம் (EBITDA) எனில் வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடன் தொகை கட்டுதல் ஆகியவற்றிற்கு முந்தைய வருமானம்).
செப்டம்பர் 2020 உடன் முடிந்த அரையாண்டில், BSNLன் வரிக்கு முந்தைய வருமானம் 602 கோடி ரூபாய்கள் என்றும், MTNLன் வருமானம் 276 கோடி ரூபாய்கள் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. கடந்த நிதியாண்டில் (2019-2020), இதே காலகட்டத்தில் BSNLன் வரிக்கு முந்தைய நஷ்டம் (EBITDA) 3,596 கோடி ரூபாய்கள் என்றும், MTNLன் நஷ்டம் 549 கோடி ரூபாய்கள் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
மேலும் அந்த அறிக்கையில், இந்த நிதியாண்டில் BSNL ஒருகோடி மொபைல் வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது என்றும், BSNLன் மொபைல் தொலைபேசி சந்தை பங்கீடு 2020, அக்டோபர் மாதத்தில் 10.36 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என்றும் தெரிவிக்கிறது.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய / மாநில சங்கங்கன் சங்கங்கள்