01.10.2020 முதல் வரவேண்டிய 5.5% IDAவிற்கும், 01.01.2021 முதல் வரவேண்டிய 6.1% IDAவிற்கும் DPE, இதுவரை உத்தரவு வெளியிட வில்லை. பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு, IDA முடக்கம் பொருந்தாது என 08.01.2021 அன்று DPE விளக்கம் கொடுத்துள்ளது. இருந்த போதும், இந்த இரண்டு தவணை IDAக்களும் ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என்ற உத்தரவை DPE இன்னமும் வெளியிடவில்லை.
இந்த சூழ்நிலையில், BSNL ஊழியர் சங்கம், கேரள உயர்நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கில், பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு இந்த மூன்று தவணை IDA முடக்கம் பொருந்தாது என உதவி தலைமை அரசு வழக்கறிஞர், இன்று 15.01.2021 அன்று ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.
எனவே, 01.10.2020 முதல் 5.5% IDAவிற்கும், 01.01.2021 முதல் 6.1%IDAவிற்கும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என DPE செயலருக்கு, மீண்டும் ஒரு கடிதத்தை BSNL ஊழியர் சங்கம் எழுதியுள்ளது.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய மாநில சங்கங்கள்