உரிய தேதியில் ஊதியம் தராமல், ஊழியர்களை கடந்த ஒரு வருட காலத்திற்கு மேல் நிர்வாகம் துன்புறுத்தி வருகின்றது. மேலும் ஊழியர்களின் பிரச்சனைகளை தீர்வு காண்பதிலும் எதிர்மறை போக்கையே கடைபிடித்து வருகின்றது. இவற்றை எதிர்த்து, BSNL ஊழியர் சங்கம் 05.02.2021 அன்று ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளது.
அதன் பின் கூடிய BSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய மையக் கூட்டம், உரிய தேதியில் ஊதியம் தரவேண்டும் மற்றும் ஊழியர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி 18.02.2021 அன்று ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது.
அதன்படி நமது மாவட்டத்தில், சேலம் பொது மேலாளர் அலுவலகத்தில், 18.02.2021 அன்று காலை 10.00 மணிக்கு போராட்டம் துவங்கும்.
கோரிக்கைகள், போராட்ட நோக்கங்களை விவரித்து மாவட்ட சங்கம் வெளியிட்ட நோட்டீஸ் கீழே பிரசுரிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பரித்து போராடுவோம்!
கோரிக்கைகளை வென்றெடுப்போம்!!.