பெட்ரோல் விலை, ராமனின் இந்தியாவில் 93 ரூபாயாகவும், ராவணன் இலங்கையில் 51 ரூபாயாகவும் உள்ளது என பாஜக தலைவர் சுப்ரமணியம் சுவாமி பேட்டி.
மத்திய அரசாங்கம், பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகளை தொடர்ச்சியாக உயர்த்தி வருகின்றது. டீசலின் விலையேற்றம் காரணமாக, அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உயர்ந்து வருகிறது. இதனால் ஏழை எளிய மற்றும் உழைப்பாளி மக்கள் கடுமையாக பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்.
சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெயின் விலையேற்றம் காரணமாகவே, பெட்ரோல் டீசல்கள் விலைகள் உயர்வதாக, அரசாங்கம், தவறான தகவலை சொல்லி மக்களை ஏமாற்றுகிறது. அது உண்மை என்றால், நமது நாட்டை காட்டிலும், அண்டை நாடுகளில் ஏன் இவற்றின் விலை குறைவாக உள்ளது?
பாஜகவின் பாராளுமன்ற உறுப்பினரான சுப்ரமணியம் சுவாமி தனக்கே உரிய பாணியில் அரசாங்கத்தை கேலி செய்துள்ளார். பெட்ரோல் விலை, ராமரின் இந்தியாவில் 92 ரூபாயாக இருக்கும் போது, ராவணின் இலங்கையில் 51 ரூபாயாக உள்ளது என்று கிண்டலடித்துள்ளார். மேலும், நேபாளத்தில் பெட்ரோல் விலை 51 ரூபாயாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.
பெட்ரோல், டீசல் மீதான வரிகளை உயர்த்தி, பாஜக அரசு மக்களை கொள்ளையடிப்பதை சுப்ரமணியம் சுவாமி வெளிப்படுத்தி உள்ளார்.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல் மத்திய மாநில சங்கங்கள்