BSNL ஊழியர்களுக்கு மூன்று தவணை IDA முடக்கத்திற்கு எதிராக BSNL ஊழியர் சங்கம் கேரள உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில், கேரள உயர்நீதிமன்றம் ஒரு இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.
IDA முடக்கம், அதிகாரிகளுக்கும், சங்கம் சாராத மேற்பார்வையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், ஊழியர்களுக்கு பொருந்தாது என்றும் கேரள உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தி உள்ளது. மேலும், மனு தாக்கல் செய்துள்ள சங்கத்தின் உறுப்பினர்களுக்கு IDA மறுக்கப்படக் கூடாது என்றும் நீதிமன்றம் தெளிவாக உத்தரவிட்டுள்ளது.
தற்போது, BSNL ஊழியர்களுக்கு IDA தவணைகளை வழங்குவதை தவிர, அரசாங்கத்திற்கு வேறு வழியில்லை. நீதிமன்ற தீர்ப்பின் நகல் கிடைத்தவுடன், நமது மத்திய சங்கம் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும்.
உறுதியான நடவடிக்கைகள் மூலம், ஊழியர்களின் உரிமைகளை பெற்றுத்தர அயராது பாடுபடும் BSNLEUவின் மத்திய சங்கத்திற்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள். சட்ட போராட்டத்திலும் நாம் படைத்த இந்த சாதனையை கொண்டாடுவோம்.