Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, February 13, 2021

முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு அழைப்பு



BSNL ஊழியர் சங்கத்தின் 18.02.2021 உண்ணாவிரத போராட்ட கோரிக்கைகளின் மீது 16.02.2021 அன்று முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்திட BSNLEU, DoT, BSNL நிர்வாகம் ஆகியவற்றிற்கு DY.LC (c) அழைப்பு


உரிய தேதியில் ஊதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கியமான பிரச்சனைகளின் மீது 18.02.2021 அன்று உண்ணாவிரத போராட்டம் நடத்திட BSNLஊழியர் சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. இந்த அறிவிப்பின் நகல் ஒன்று முதன்மை தொழிலாளர் நல ஆணையருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், இந்த பிரச்சனை தொடர்பாக 16.02.2021 அன்று விவாதிக்க, Dy.CLC(C), DoT செயலர் திரு அன்ஷூ பிரகாஷ், CMD BSNL திருP. K. புர்வார், BSNL இயக்குனர்கள், அர்விந்த் வட்னேர்கர் மற்றும் யோஜனா தாஸ், தோழர் P. அபிமன்யு GS BSNLEU மற்றும் திரு A. M. குப்தா SR.GM(SR) BSNL ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தக் கூட்டம் நேரடியாக 16.02.2021 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலர் தோழர் P. அபிமன்யு தனது உடல் நலக் குறைவு காரணமாக பாண்டிச்சேரியில் சிகிச்சையில் இருப்பதால், அந்தக் கூட்டத்தை காணொளி காட்சி மூலம் நடத்த கேட்டுக் கொண்டார். இதனை தொழிலாளர் நல முதன்மை ஆணையர் அலுவலகம் ஏற்றுக் கொண்டு, இந்த கூட்டம் காணொளி காட்சி மூலம் 16.02.2021 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

BSNL ஊழியர் சங்கத்தின் உண்ணாவிரத போராட்டத்தை, மத்திய தொழிலாளர் நலத்துறையினர் அக்கறையுடன் கவனிக்கின்றனர். ஆனால் தொழிலாளர் நலத்துறையினரின் பேச்சு வார்த்தைக்கு, DoTயும், BSNL நிர்வாகமும் போதிய அக்கறை செலுத்துவதில்லை என்பதும் உண்மையே.

தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர் 

தகவல்: மத்திய மாநில சங்கங்கள்