ஊழியர்களுக்கு, GTI திட்டம் (GROUP TERM INSURANCE - குழுக்காப்பீட்டுத் திட்டம்) அமலாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், BSNL மற்றும் LIC கையெழுத்திட்டதை தொடர்ந்து, அதற்கான உத்தரவை, கார்ப்பரேட் நிர்வாகம், 29.01.2021 அன்று வெளியிட்டது. இந்த GTI திட்டத்திற்கு விருப்பம் தெரிவிப்பதற்கான செயல்முறைகள் தொடர்பாகவும், அன்றே நிர்வாகம் ஒரு வழிகாட்டுதலையும் வெளியிட்டுள்ளது.
ONLINE (ERP / ESS ) மூலம் இதற்கு விருப்பம் தெரிவிப்பதற்கான கடைசி தேதி 15.02.2021. இந்த திட்டம் 01.03.2021 முதல் அமலுக்கு வரும்.
அதன்படி,
ஆயுள் காப்பீட்டுத்தொகை ரூ. 20 லட்சம்
கால அளவு : ஓய்வு பெறும் வயதை அடையும் வரை
Premium தொகை
50 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.3776.00
50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.18172.00
ஆண்டிற்கு ஒருமுறை சம்பளத்தில் பிடிக்கப்பட்டு, LIC நிறுவனத்திற்கு Premium தொகை செலுத்தப்படும்.
GTI அமலாக்கத்தில் BSNL ஊழியர் சங்கத்தின் பங்கு.
ஊழியர்களுக்கு GTI திட்டம் அமலாக்கப்பட்டதற்கு BSNL ஊழியர் சங்கம், மகத்தான பங்களிப்பை செய்துள்ளது. தற்போதாவது இந்த திட்டம் அமலாகிறது என்று சொன்னால், அது BSNL ஊழியர் சங்கம் கொடுத்த அழுத்தத்தால் தான் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். 10.12.2020 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் பொதுசெய்லர் தோழர் P.அபிமன்யு, DIRECTOR (HR) உடன் விவாதிக்கும் போது, ஊழியர்களுக்கு GTI திட்டம் அமலாக்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு தனது, கடுமையான அதிருப்தியை தெரிவித்தார்.
அதன் விளைவாக, அன்றைய தினமே, LIC யோடு இது தொடர்பாக விவாதிக்க DIRECTOR(HR) ஒரு குழுவை அமைத்தார். அதற்கு பின்னரே இந்த பிரச்சனை வேகம் பிடித்தது. இதுதவிர, கீழ்கண்ட பங்களிப்புகளையும், BSNL ஊழியர் சங்கம் செய்துள்ளது.
இந்த திட்டத்தில் 70% ஊழியர்கள் இணைய வேண்டும் என LIC ஒரு நிபந்தனை வைத்தது. ஆனால் BSNL ஊழியர் சங்கத்தின் கடும் எதிர்ப்பின் காரணமாக அந்த நிபந்தனை நீக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளுக்கு இந்த திட்டம் அமலாக்கப்பட்ட போது, அவர்களுக்கான ப்ரீமியம் ஆயிரம் ரூபாய்களுக்கு 1.60 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஊழியர்களுக்கான முன்மொழிவில் அது ஆயிரத்திற்கு 1.80 ரூபாய் என இருந்தது. இதனையும் கடுமையாக எதிர்த்த BSNL ஊழியர் சங்கம், அதிகாரிகளுக்கு நிர்ணயித்த கட்டணமே, ஊழியர்களுக்கும் இருக்க வேண்டும் என கடுமையாக கோரியது. அதுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.