IDA தவணைகளை வழங்க, BSNL நிர்வாகத்திற்கு அறிவுறுத்த வேண்டுமென தொலை தொடர்பு துறையின் செயலருக்கு BSNL ஊழியர் சங்கம் கடிதம்.
BSNL ஊழியர் சங்கத்தின் கடிதங்களின் அடிப்படையில், BSNL ஊழியர்களுக்கு IDA தவணையினை வழங்கும் பிரச்சனையில், தேவையான உத்தரவுகளை வழங்க வேண்டுமென தொலை தொடர்பு துறைக்கு DPE கடிதம் எழுதியுள்ளது.
அந்த DPEயின் கடிதத்தின் அடிப்படையில், 01.10.2020 முதல் 5.5% IDAவையும், 01.01.2021 முதல் 6.1% IDAவையும் உடனடியாக வழங்க வேண்டும் என BSNL நிர்வாகத்திற்கு, தேவையான வழிகாட்டுதலை வழங்க வேண்டுமென BSNL ஊழியர் சங்கம், தொலை தொடர்பு துறையின் செயலருக்கு கடிதம் எழுதியுள்ளது.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய மாநில சங்கங்கள்