நேரடி நியமன JEக்களின் விருப்ப மாற்றலில் உள்ள சிரமங்களை களைய, DIRECTOR(HR) தலையிட வேண்டுமென BSNL ஊழியர் சங்கம் கடிதம்
ஒரு மாநிலத்தில் தேர்வாகியுள்ள JEக்கள், 5 ஆண்டுகள் கழித்தே விருப்ப மாற்றலில் செல்ல முடியும். பல இடங்களில், தல மட்ட அதிகாரிகள், அந்த தோழர்களின் மாற்றல் விண்ணப்பங்களை CGM அலுவலகங்களுக்கு அனுப்புவதில்லை. அனுப்பப்பட்டு, மாற்றல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டாலும், ஆட்பற்றாக்குறையை காரணம் காட்டி அவர்களை மாற்றலில் அனுப்புவதில்லை.
எனவே இந்த பிரச்சனைகளில் தலையிட வேண்டுமென BSNL ஊழியர் சங்கம், DIRECTOR(HR)க்கு கடிதம் எழுதியுள்ளது. தலமட்டங்களில், நேரடி நியமனம் செய்யப்பட்ட JEக்களின் விருப்ப மாற்றல் விண்ணப்பங்கள் நிறுத்தி வைக்கப்படக்கூடாது என்றும், மாற்றல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட உடன் அவர்கள் மாற்றலில் அனுப்பபட வேண்டும் என்றும், அந்தக் கடிதத்தில் BSNL ஊழியர் சங்கம் கோரியுள்ளது.