Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, March 25, 2021

பஞ்சபடி முடக்க விவகாரம்



ஊழியர்களுக்கு IDA வழங்கப்படவில்லையெனில், அது நீதிமன்ற அவமதிப்பிற்கு உள்ளாகும் என BSNL ஊழியர் சங்கம் CMD BSNLக்கு கடிதம்


IDA முடக்கம் BSNL ஊழியர்களுக்கு பொருந்தாது என கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய உடனேயே, DPE செயலருக்கு, கேரள உயர்நீதிமன்ற தீர்ப்பை அமலாக்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் கடிதம் கொடுத்தது. ஊழியர்களுக்கு IDA வழங்கும் உத்தரவை DPE வழங்குவதில்லை என அந்த கடிதத்தை DoT செயலருக்கு அனுப்பியது. மேலும் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்தக் கடிதத்தில் DPE தெரிவித்திருந்தது. 

அந்த அடிப்படையில், கேரள உயர்நீதிமன்ற தீர்ப்பை அமலாக்க வேண்டும் என வலியுறுத்தி, BSNL ஊழியர் சங்கம், CMD BSNLக்கு கடிதம் எழுதியுள்ளது. மேலும் அந்தக் கடிதத்தில், ஊழியர்களுக்கு IDA வழங்காதது, நீதிமன்ற அவமதிப்பிற்கு இட்டு செல்லும் என்றும் BSNL ஊழியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

தோழமையுடன் 
E. கோபால், 
மாவட்ட செயலர் 

தகவல்: மத்திய மாநில சங்கங்கள்