BSNLல் E-OFFICE முறை அமலாக்கத்தில் ஊழியர்கள் ஓரம் கட்டப்படுவதாக CMD BSNLக்கு BSNL ஊழியர் சங்கம் கடிதம்
BSNLல் E-OFFICE முறை அமலாக்கப்பட்டு வருகிறது. எனினும் இதில் JOA, SOA, AOS மற்றும் OS போன்ற கேடர்கள் ஓரம் கட்டப்பட்டு வருகிறது. ஆவணங்களை நகல் எடுப்பது, கோப்புக்களை சீரமைப்பது உள்ளிட்ட பணிகள் மட்டுமே அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. மேலே கூறப்பட்டுள்ள கேடரில் பணியாற்றும் ஊழியர்களை நான்காம் பிரிவு ஊழியர்களாக மாற்றப்படுவதையே இது எடுத்துக் காட்டுகிறது.
இதில் தனது ஆட்சேபணையை பதிவு செய்துள்ளதுடன், இவற்றை திருத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என CMD BSNLக்கு BSNL ஊழியர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய மாநில சங்கங்கள்