2021, மார் 22ஆம் தேதி BSNL ஊழியர் சங்கம் தனது 20ஆவது அமைப்பு தினத்தை கொண்டாடுகிறது. 22.03.2001 அன்று விசாகபட்டணத்தில், துவங்கப்பட்ட நமது BSNLEU பேரியக்கம், இன்று ஆல விருட்சமாக வளர்ந்துள்ளது.
புதிய ஆளெடுப்பு இல்லை என்றாலும், ஆயிர கணக்கில் ஊழியர்கள் VRS என்ற பெயரில் வெளியேற்றப்பட்டாலும், கடந்த 2004 முதல் நாம் தான் முதன்மை சங்கம். அரசாங்கத்தின் பிற்போக்கான நிறுவன விரோத , ஊழியர் விரோத கொள்கைகளை எதிர்த்து நாம் நடத்த கூடிய சமரசமற்ற போராட்டங்கள் தான் இந்த வெற்றியை நாம் தக்க வைப்பதற்கு அடிப்படை காரணம்.
இருப்பினும், மோடி அரசாங்கம், BSNLஐ சீரழிக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து வருகிறது. BSNL, தனது 4G சேவைகள் வழங்காமல் இருப்பதற்கான, தந்திரமான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருகின்றது. அரசாங்கம் 4G அலைக்கற்றையை வழங்கி விட்டு, 4G கருவிகளை வாங்குவதற்கு அனுமதியை மறுக்கின்றது. 4G சேவையை வழங்கவில்லை எனில், BSNL நிறுவனம் விரைவில் மூடப்படும். மேலும் BSNLன் டவர்களையும், ஆப்டிக் ஃபைபர் கேபிள்களையும் விற்பது என சமீபத்தில் அரசாங்கம் அறிவித்துள்ளது. இது கட்டம் கட்டமாக BSNLஐ தனியாருக்கு தாரை வார்ப்பதை தவிர வேறு எதுவுமில்லை. அனைத்து பொதுத்துறைகளையும் சீரழிக்கும் பணியினை மோடி அரசாங்கம் செய்து வருகிறது.
இந்த அமைப்பு தினத்தை பயன்படுத்தி , பொது மக்கள் மத்தியில் ‘BSNLஐ பாதுகாப்போம்’ என்கிற பிரச்சார இயக்கத்தை ஒரு வார காலம் நடத்துவது என, சென்னையில் கூடிய BSNL ஊழியர் சங்கத்தின் மத்திய செயற்குழு முடிவு செய்துள்ளது.
சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமுலில் உள்ளதால், அதை நடைமுறைப்படுத்துவதில் சில சிக்கல்கள் உள்ளது. கொடி ஏற்றுவதில் சிரமம் உள்ளது. இருப்பினும், நமது கிளை சங்கங்கள், வாயிற் கூட்டங்களை நடத்தி அமைப்பு தினத்தை கொண்டாட வேண்டும் என மாவட்டம் சங்கம் கேட்டு கொள்கிறது. தோழர்களுக்கு இனிப்பு வழங்கி கிளைகளில் உள்ள மாவட்ட சங்க நிர்வாகிகளை பயன்படுத்தி கூட்டங்கள் நடத்த வேண்டும்.வாய்ப்பு உள்ள இடத்தில ஏற்கனவே நமது மாநில சங்கம் வெளியிட்டுள்ள பிரச்சார கருத்துக்களை நகல் எடுத்து அனைவருக்கும் வழங்க வேண்டும். நிகழ்வுகளின் படங்களை மாவட்ட சங்கத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அமைப்பு தின வாழ்த்துக்களுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்
குறிப்பு :சேலம் நகர கிளைகள் சார்பாக 22.03.2021 அன்று காலை 10.30 மணி அளவில், GM அலுவலகத்தில் வாயிற் கூட்டம் நடைபெறும்.
பிரச்சார இயக்க பத்திரிக்கை செய்தி காண இ ங்கே சொடுக்கவும்