Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, March 25, 2021

CMD BSNL உடன் BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலர் சந்திப்பு

 


23.03.2021 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு, CMD BSNL திரு P.K.புர்வார் அவர்களை சந்தித்து கீழ்கண்ட விஷயங்களை விவாதித்தார்.

(1) ஊழியர்களுக்கு IDA வழங்குவது தொடர்பான கேரள உயர் நீதிமன்ற தீர்ப்பை அமலாக்குதல்:-

கேரள உயர்நீதிமன்ற தீர்ப்பை அமலாக்க கோரிய கடிதத்தை பொதுச்செயலர், CMD BSNLஇடம் வழங்கி, ஊழியர்களுக்கு IDA வழங்கும் விஷயத்தில் தான் எதுவும் செய்ய வேண்டியதில்லை என்று விளக்கம் அளித்துள்ளது என்பதை விளக்கினார். எனவே, 01.10.2020 மற்றும் 01.01.2021 முதல் வழங்க வேண்டிய இரண்டு தவணை IDAக்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். 

இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என CMD BSNL சாதகமாக பதிலளித்தார்.

(2) ஊதிய மாற்றம்:-

கடந்த மாதம் CMD BSNLஉடன் விவாதித்ததின் தொடர்ச்சியாக, அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுடன், ஊதிய பேச்சு வார்த்தையை மீண்டும் துவங்க வேண்டும் என வலியுறுத்தினார். பெரும்பாலான ஊழியர்கள், ஊதிய தேக்க நிலையை சந்தித்துள்ளனர் என்பதை சுட்டிக்காட்டி, அவற்றிற்கு தீர்வு காண ஊதிய மாற்றம் ஒன்றுதான் வழி என்பதையும் தெரிவித்தார். 

இந்த விஷயம் பரிசீலிக்கப்படும் என்று மட்டும் CMD BSNL பதிலளித்துள்ளார்.

(3) உரிய தேதியில் ஊதியம் வழங்குவது:-

2021, பிப்ரவரி மாத ஊதியத்திற்கான நிதி அனுப்பப்பட்டு விட்டதாக CMD BSNL, BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலரிடம் தெரிவித்தார். இந்த விஷயம் தொடர்பாக BSNL ஊழியர் சங்க்ம் 22.03.2021 அன்று கொடுத்த கடிதத்தை படித்ததாகவும் CMD BSNL தெரிவித்தார். ஒவ்வொரு மாதத்தின் இறுதி நாளன்று, ஊதியம் கொடுக்கும் முறை கடைபிடிக்கப்பட வேண்டும் என பொதுச்செயலர் வலியுறுத்தினார். உரிய தேதியில் ஊதியம் வழங்குவது மட்டுமே, இதற்கு நிரந்தர தீர்வாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 

இதனை அமல்படுத்த முயற்சிப்பதாக CMD BSNL தெரிவித்துள்ளார்.

(4) ஒப்பந்த ஊழியர்களின் ஊதியம்:-

கடந்த பல மாத காலமாக தேங்கிக் கிடக்கும் ஒப்பந்த ஊழியர்களின் ஊதிய நிலுவை தொகைக்கு தேவையான நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என பொதுச்செயலர் கேட்டுக் கொண்டார். இரண்டு மாத கால ஊதியத்திற்கான நிதியை தற்போதுதான் வழங்கியுள்ளதாக CMD BSNL பதிலளித்தார். OUTSOURCING முறை தொடர்பாகவும், ஒப்பந்த ஊழியர்களை பயன்படுத்துவது தொடர்பாகவும், BSNL ஊழியர் சங்கத்தோடு முழுமையாக விவாதிக்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு கேட்டுக்கொண்டார். 

இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட CMD BSNL, அந்தக் கூட்டம் விரைவில் கூட்டப்படும் என உறுதி அளித்துள்ளார்.

தோழமையுடன், 
E. கோபால், 
மாவட்ட செயலர் 

தகவல்: மத்திய மாநில சங்கங்கள்