தோழர் V.A.N. நம்பூதிரி எழுதிய “MY LIFE, STRUGGLES" என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.
2021, மார்ச் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் நடைபெற்ற கர்நாடக மாநில BSNL ஊழியர் சங்க செயற்குழுவின் ஒரு முக்கிய நிகழ்வாக, தோழர் V.A.N.நம்பூதிரி எழுதிய "MY LIFE, STRUGGLES" என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. AIIEA சங்கத்தின் முன்னாள் தலைவர் தோழர் அமானுல்லா கான் அவர்கள் புத்தகத்தை வெளியிட்டார். அந்தக் கூட்டத்தில் தோழர் V.A.N.நம்பூதிரி அவர்களை கர்நாடக மாநில சங்கம் கௌரவித்தது.
தனது சுயசரிதையை, புத்தகமாக வெளியிட்டுள்ள தோழர் V.A.N. நம்பூதிரி அவர்களுக்கு சேலம் மாவட்ட சங்கம் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.