BSNLEU மத்திய செயற்குழு முடிவின் அடிப்படையில், "BSNL ஐ பாதுகாப்போம்" பிரச்சார இயக்கம், 30.03.2021 அன்று சேலம் மாவட்டத்தில் துவங்கப்பட்டது. ஊரக கிளைகள் சார்பாக 31.3.2021 முதல் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தபட வேண்டும் என மாவட்ட சங்கம் அறைகூவல் கொடுத்திருந்தது.
அதன்படி, 31.03.2021 அன்று ஆத்தூர் மற்றும் வாழப்பாடி கிளைகளிலும், 02.04.2021 அன்று ராசிபுரம் மற்றும் நாமகிரிப்பேட்டை கிளைகளிலும், 03.04.2021 இன்று திருச்செங்கோடு, நாமக்கல், பரமத்தி வேலூர் கிளைகளிலும் இயக்கம் நடத்தப்பட்டது.
தேர்தல் நடத்தை விதி முறைகள், கடுமையான கோடை வெப்பம், உள்ளிட்ட சவால்களை எதிர்கொண்டு, சிறப்பாக இயக்கம் நடத்திய கிளை சங்கங்களுக்கு, மாவட்ட சங்கத்தின் தோழமை வாழ்த்துக்கள் மற்றும் நெஞ்சு நிறை நன்றிகள்.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்
ராசிபுரம் (02.04.2021)
நாமகிரிப்பேட்டை (02.04.2021)
திருச்செங்கோடு (03.04.2021)
நாமக்கல் (03.04.2021)
பரமத்திவேலூர் (03.04.2021)