BSNLEU மற்றும் TNTCWU தர்மபுரி மாவட்ட சங்கங்களின், முன்னாள் மாவட்ட சங்க நிர்வாகி, அருமை தோழர் P. கஜபதி, TT(Rtd)., இன்று (05.05.2021) இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.
தோழர் கஜபதி இயக்க பணிகளில் துடிப்பு மிக்க தோழர். தற்காலிக ஊழியராக இலாக்காவில் பணியை துவங்கி, நிரந்தரம் பெற்று, TT தோழராக 2019ல் ஓய்வு பெற்றார்.
ஒப்பந்த ஊழியர் இயக்க பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்ட அற்புதமான தோழர். இடதுசாரி சித்தாந்தத்தை இறுதி மூச்சு வரை கடைபிடித்த தோழர்.
அன்பு தோழர் கஜபதியின் மறைவிற்கு, சேலம் மாவட்ட BSNLEU சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.
செவ்வணக்கம் தோழரே!
வருத்தங்களுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்