BSNL ஊழியர் சங்கம் ஏற்கனவே தெரிவித்த படி, BSNL நிர்வாகம், BSNL கொரோனா நிதியை அமலாக்கும் உத்தரவை, 20.05.2021 அன்று வெளியிட்டுள்ளது. விரும்பும் ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து, ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்யும் நிர்வாகம், தானும் அதற்கு ஈடான தொகையினை செலுத்தும்.
01.04.2020 முதல் கொரொனாவால் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்ச ரூபாய் வழங்கப்படும். 20.05.2021க்கு முன் உயிரிழந்தவர்களின் விவரங்களை 30 நாட்களுக்குள், நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
BSNL கொரொனா நிதி(BCF) குழு ஒன்று உருவாக்கப்படும். அதில் நான்கு அங்கீகரிக்கப்பட்ட, ஊழியர் மற்றும் அதிகாரிகளின் சங்கங்களின் பிரதிநிதிகளும், நிர்வாகத்தின் சார்பில் மூவரும் உள்ளிட்ட எழுவர் இருப்பர். GPF/EPF ஆகியவற்றை பெருவதற்காக நியமிக்கப்பட்டவர் (NOMINEE), இந்த 10 லட்ச ரூபாய் நிவாரண தொகையினை பெறுவார்கள்.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல் மத்திய மாநில சங்கங்கள்