கொரோனாவால் உயிரிழந்த தோழர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு, 10 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்குவதற்கான BSNL கொரோனா நிதியத்தை, BSNL நிர்வாகம் அறிவித்துள்ளதை நாம் ஏற்கனவே தெரிவித்திருந்தோம். இந்த பத்து லட்ச ரூபாயில் BSNL நிர்வாகம், 5 லட்ச ரூபாயை வழங்கும். மீதமுள்ள 5 லட்ச ரூபாயை நமது ஊழியர்களின் பங்கீட்டிலிருந்து வழங்கப்படும்.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவுவது என்பது ஒவ்வொரு ஊழியரின் கடமையாகும். எனவே, BSNL கொரோனா நிதிக்கு, அனைத்து ஊழியர்களும், அதிகாரிகளும் தங்களின் ஒரு நாள் ஊதியத்தை நன்கொடையாக வழங்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் கேட்டுக் கொள்கிறது.