30 நாட்களில் 135 BSNL ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்- தடுப்பூசி தொடர்பாக மீண்டும் அமைச்சருக்கு BSNL ஊழியர் சங்கம் கடிதம்
கொரொனா பெருந்தொற்றின் காரணமாக, BSNL ஊழியர்களின் மதிப்பு மிக்க உயிர்கள் அதிக அளவில் பறி போகிறது. இதுவரை 170 BSNL ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த 30 நாட்களில் மட்டும், 135 ஊழியர்கள் பலியாகி உள்ளது கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
BSNL ஊழியர்களை முன்கள பணியாளர்களாக பாவித்து, தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை வழங்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் 02.03.2021 அன்றே, மத்திய தொலை தொடர்பு அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தது.
BSNL ஊழியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், தடுப்பூசி போடப்பட வேண்டும் என வலியுறுத்தி, மத்திய தொலை தொடர்பு அமைச்சர் திரு ரவிசங்கர் பிரசாத் அவர்களுக்கு, 20.05.2021 அன்று மீண்டும் ஒரு கடிதத்தை, BSNL ஊழியர் சங்கம் எழுதியுள்ளது.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல் மத்திய மாநில சங்கங்கள்