ஊழியர்களுக்கு IDA வழங்க வேண்டும் என்கிற நீதிமன்ற தீர்ப்பு அமலாக்கப்படாதது தொடர்பாக மேல் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மத்திய சங்கம், வழக்கறிஞரை கேட்டுக் கொண்டுள்ளது.
BSNL ஊழியர்களுக்கு IDA வழங்க வேண்டும் என்கிற விஷயத்தில், 17.02.2021 அன்று கேரள உயர் நீதிமன்றம் ஒரு சாதகமான தீர்ப்பை வழங்கியிருந்தது. கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அமலாக்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம், DPEக்கும், DoTக்கும், BSNL நிர்வாகத்திற்கும், தலா 2 கடிதங்களை எழுதியுள்ளது. ஆனாலும் இதுவரை அது அமலாக்கப்படவில்லை. தற்போதுள்ள நிலையின் படி, ஊழியர்களுக்கு 10.5% IDA வழங்கப்பட வேண்டும்.
இது தொடர்பாக, எர்ணாகுளத்தில் உள்ள வழக்கறிஞரிடம், 20.05.2021 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு, தொலைபேசியில் விவாதித்தார். தேவையான ஆதரங்களோடு, வழக்கறிஞருக்கு நமது பொதுச்செயலர், ஒரு விரிவான கடிதத்தையும் எழுதியுள்ளார். இது தொடர்பான பொருத்தமான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாக வழக்கறிஞர் உறுதி அளித்துள்ளார்.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல் மத்திய மாநில சங்கங்கள்