கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக நிர்வாகம் மற்றும் சங்கங்களுக்கு இடையே ONLINE கூட்டம்
06.05.2021 அன்று திரு R.K.கோயல் PGM (Pers) தலைமையில், நிர்வாகம் மற்றும் ஊழியர் மற்றும் அதிகாரிகளின் சங்க தலைவர்களுக்கு இடையேயான சந்திப்பு, ONLINE மூலமாக நடைபெற்றது. கொரோனாவால் உயிரிழக்கும் BSNL ஊழியர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக விவாதிக்கவே இந்தக் கூட்டம் நடைபெற்றது.
BSNL ஊழியர் சங்கத்தின் சார்பாக, பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு கலந்துக் கொண்டு, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பரிவு அடிப்படையில் பணி வழங்குவது தான் நிரந்தர தீர்வாக இருக்க முடியும் என்பதை வலியுறுத்தி கூறினார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கான நிவாரண தொகையில், நிர்வாகமும் அதன் பங்கை செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
விரிவான விவாதத்திற்கு பின், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, விருப்பம் உள்ள ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்வது என்றும், நிர்வாகமும் அதற்கு இணையான தொகையை வழங்கும் என்றும் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய / மாநில சங்கங்கள்