கொரோனா தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கும், தனிமைபடுத்தப்படுவதற்கும் வழங்கபட வேண்டிய விடுப்பு தொடர்பான DoP&T உத்தரவை BSNL ஊழியர்களுக்கும் அமலாக்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் கார்ப்பரேட் அலுவலகத்தின் Sr.GM(Estt.) அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள், கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கும், தனிமைபடுத்தப்பட்டதற்கும், வழங்கப்பட வேண்டிய விடுப்பு தொடர்பாக DoP&T., 07.06.2021 அன்று ஒரு கடிதம் வெளியிட்டுள்ளது.
அதிலுள்ள வழிகாட்டுதல்கள், BSNL ஊழியர்களுக்கும் பொருந்தக் கூடியவையே. எனவே, அந்தக் கடிதத்தில் உள்ளவற்றை BSNL ஊழியர்களுக்கும் அமலாக்கும் படி, கார்ப்பரேட் அலுவலகம், தலமட்டங்களுக்கு அனுப்ப வேண்டும் என BSNL ஊழியர் சங்கம், கார்ப்பரேட் அலுவலகத்தின் Sr.GM(Estt.) அவர்களுக்கு 08.06.2021 அன்று கடிதம் எழுதியுள்ளது.