மே மாத ஊதியம் வழங்குவது, வழக்கம் போல கால தாமதமாகி வருகின்றது. BSNL ஊழியர் சஙக்த்தின் பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு அவர்கள், 14.06.2021 அன்று திரு P.K.புர்வார், CMD BSNL அவர்களிடம், மேலும் கால தாமதமின்றி, மே மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
எனினும், இதற்கு எந்த ஒரு உறுதி மொழியையும், CMD BSNL தரவில்லை. இந்த வார இறுதியில், AUAB கூட்டம் நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்தில் இந்த பிரச்சனை பிரதானமாக விவாதிக்கப்பட்டு, இயக்கங்களை நடத்த திட்டமிடப்படும் என மத்திய சங்கம் தெரிவித்துள்ளது.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல் மத்திய மாநில சங்கங்கள்