ஊதியம் வழங்க வலியுறுத்தி 25.06.2021 அன்று மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்திடுக!
21.06.2021 அன்று நடைபெற்ற AUAB கூட்டம், மே மாத ஊதியம், இன்னமும் வழங்கப்படாததற்கும், ஒவ்வொரு மாதமும் உரிய தேதியில் ஊதியம் வழங்கும் தனது கடமையிலிருந்து தவறியுள்ளதற்கும், BSNL நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்தது.
விரிவான விவாதத்திற்கு பின், 2021, மே மாத ஊதியத்தை உடனடியாக வழங்கவும், மாதத்தின் கடைசி நாளன்று, அந்த மாத ஊதியம் வழங்கப்பட வேண்டுமென்பதையும் வலியுறுத்தி 25.06.2021 அன்று நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
இந்த இயக்கங்கள் தொடர்பான அறிவிப்பை இன்று (23.06.2021) நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல் மத்திய மாநில சங்கங்கள்