பணியில் உள்ள மற்றும் ஓய்வூதியர்களுக்கு, FTTH இணைப்புகளில் எந்த ஒரு சலுகையும் தரப்படவில்லை. BSNL ஊழியர்களுக்கு, ப்ராட் பேண்ட் சேவையில், மாதமொன்றுக்கு, அதிகபட்சமாக 300 ரூபாய் வரை சலுகை தரப்பட்டு வருகின்றது.
எனவே, FTTH இணைப்புகளில், பணியில் உள்ள மற்றும் ஓய்வூதியர்களுக்கு, எந்த ஒரு உச்ச வரம்பும் இன்றி, 50% சலுகை தரவேண்டும் என BSNL ஊழியர் சங்கம் 29.09.2020 அன்று கோரிக்கை வைத்துள்ளது. இந்த கோரிக்கையை உரிய மட்டத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
இது தொடர்பாக நிர்வாகக் குழு விரைவில் பரிசீலிக்கும் என்று தெரிய வந்துள்ளது.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல் மத்திய மாநில சங்கங்கள்