BSNL ஊழியர்களுக்கு IDA வழங்காதது தொடர்பாக DPE மற்றும் தொலை தொடர்பு துறையின் செயலருக்கு BSNL ஊழியர் சங்கம் மீண்டும் ஒரு கடிதம்
01.10.2020 முதல் BSNL ஊழியர்களுக்கு IDA வழங்கப்படவில்லை. அதிகாரிகளுக்கான IDAவை மட்டுமே அரசாங்கம் முடக்கி வைத்துள்ளது. ஊழியர்களுக்கான IDAவை அரசாங்கம் முடக்கவில்லை. இப்படி இருந்த போதும், BSNL ஊழியர்களுக்கு IDA வழங்கப்படவில்லை. BSNLல் உள்ள ஊழியர்களுக்கு IDAவை மறுக்கக் கூடாது என கேரள உயர் நீதிமன்றம், 17.02.2021ல் உத்தரவிட்டது. ஆனால் அதற்கு பின்னரும், DPE, DoT மற்றும் BSNL நிர்வாகம் ஆகியவை, ஊழியர்களுக்கு வரவேண்டிய IDAக்களை வழங்கவில்லை.
எனவே, BSNL ஊழியர்களுக்கு IDA தவணைகளை வழங்க வேண்டும் என்கிற கேரள உயர்நீதிமன்ற உத்தரவை அமலாக்க வேண்டும் என DPE மற்றும் தொலை தொடர்பு துறையின் செயலாளர்களுக்கு மற்றொரு கடிதத்தை, BSNL ஊழியர் சங்கம் அனுப்பியுள்ளது.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய / மாநில சங்கங்கள்