BSNL ஊழியர்களுக்கு 01.10.2020 மற்றும் 01.01.2021 ஆகிய தேதிகளில் வரவேண்டிய இரண்டு தவணை IDAக்கள் வழங்கப்படவில்லை. BSNL ஊழியர் சங்கம், இது தொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, சாதகமான உத்தரவு பெற்றுள்ளதை நாம் அனைவரும் அறிவோம்.
நீதிமன்ற உத்தரவை அமலாக்க கோரி, BSNL ஊழியர் சங்கம், தொடர்ச்சியாக DoT மற்றும் DPE செயலாளர்களுக்கு கடிதம் எழுதி வந்தது. 23.03.2021 அன்று, CMD BSNL திரு P.K.புர்வார் அவர்களை நேரில் சந்தித்த BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு, இந்த பிரச்சனையை விவாதித்தார். நீதிமன்ற உத்தரவை அமலாக்குவதாக, அன்று CMD BSNL உறுதி அளித்தார். நீதிமன்ற உத்தரவை அமலாக்குவதற்கு DoTயின் ஒப்புதலைக் கோரி, அவர் உடனடியாக, DoTக்கு கடிதமும் எழுதினார். இதற்கு DoT தனது ஒப்புதலை தந்துவிட்டதாக தெரிய வந்துள்ளது.
01.10.2020 மற்றும் 01.01.2021 முதல் வழங்க வேண்டிய, அதிகார பூர்வ IDA சதவிகித அளவினை தெரிவிக்கும் படி, BSNL நிர்வாகம் DPEக்கு கடிதம் எழுதியுள்ளது.
10.06.2021 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு, கார்ப்பரேட் அலுவலகத்தில் உள்ள Sr.GM(Estt) திரு சௌரப் தியாகி அவர்களிடம் உரையாடும் போது, DPE அலுவலகத்தில் உள்ள ஒரு மூத்த அதிகாரியிடம் Sr.GM(Estt) தொலைபேசியில் உரையாடியதாகவும், IDA சதவிகித விவரங்களை அதிகார பூர்வமாக தெரிவிக்க DPE ஏற்றுக் கொண்டுள்ளதாக, அந்த அதிகாரி தெரிவித்ததாகவும், Sr.GM(Estt) தெரிவித்துள்ளார்.
DPEயிடம் இருந்து வரவேண்டிய அறிவிப்பு, எந்த சமயத்தில் வேண்டுமானாலும், கார்ப்பரேட் அலுவலகத்திற்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு பின், BSNL ஊழியர்களுக்கு, 01.10.2020 முதல் 5.5% IDAவையும், 01.01.2021 முதல்6.1% IDAவையும் வழங்குவதற்கான உத்தரவை, கார்ப்பரேட் அலுவலகம் வெளியிடும்.
01.10.2020 முதல் நிலுவை தொகையும் வழங்கப்படும்.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய / மாநில சங்கங்கள்