AUAB போராட்ட அறைகூவல்படி, 28.07.2021 அன்று சேலம் மாவட்ட AUAB சார்பாக பெருந்திரள் உண்ணாவிரத போராட்டம், சேலம் மெயின் தொலைபேசி நிலையத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது.
போராட்டத்திற்கு தோழர்கள் S. ஹரிஹரன் (BSNLEU), D. தியாகராஜன் (AIGETOA), V. குருவாயூர் கண்ணன் (SNEA) கூட்டு தலைமை பொறுப்பு ஏற்றனர். விண்ணதிரும் கோஷங்களுக்கு பின், தலைமைக்குழு தோழர்கள் அறிமுகவுரை வழங்கினார்கள்.
BSNLEU தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S. தமிழ்மணி போராட்டத்தை முறைப்படி துவக்கி வைத்து துவக்கவுரை வழங்கினார். SEWABSNL அமைப்பின் மாநில நிர்வாகி தோழர் G. மாதையன் உணர்வுபூர்வமாக உரையாற்றினார்.
பின்னர் தோழர்கள் R. ஸ்ரீனிவாசன் (SNEA) J. தினகரன் (AIGETOA), M. சண்முகம்(BSNLEU), P. பொன்ராஜ் (SNEA), V. அன்பழகன் (AIGETOA) ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
சகோதர மற்றும் தோழமை சங்கங்கள் சார்பாக, இரும்பாலை (SAIL - CITU) தோழர் D. சுரேஷ்குமார், தோழர்கள் C. பாஸ்கர் மற்றும் M. செல்வம் (TNTCWU), G. மதியழகன்(AIBDPA), K.R. கணேசன் (அஞ்சல் / RMS), N. சண்முகம் (அஞ்சல் / RMS ஓய்வூதியர்) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
AUAB சேலம் மாவட்ட செயலர்கள் தோழர்கள் V. சண்முகசுந்தரம்(AIBSNLEA), G. சேகர்( SNEA), B. மணிகுமார்(AIGETOA), E. கோபால் (BSNLEU) ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள்.
இறுதியாக, தோழர் P. தங்கராஜு (BSNLEU) நன்றி கூறி உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தார்.
உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும், சேலம் மாவட்ட AUAB சார்பாக வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஊழியர்கள், அதிகாரிகள், ஒப்பந்த ஊழியர்கள், ஒய்வூதியர்கள் என சுமார் 250 தோழர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். சுமார் 150 தோழர்கள் இருக்கையில் அமர்ந்து இறுதி வரை கலந்து கொண்டார்கள். 50க்கும் மேற்பட்ட பெண் தோழர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டது சிறப்பானது. BSNL நிறுவன வளர்ச்சிக்கும், ஊழியர் நலனுக்கும் உருவாக்கப்பட்டள்ள இந்த ஒற்றுமை போற்றி பாதுகாக்கபடும்.