Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, July 31, 2021

BSNLEU சங்கத்தின் மற்றுமொரு சாதனை!


விருப்பப்படும் ஊழியர்களுக்கு ஒரு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமலாக்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம், 15.05.2021 அன்று நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியது. இந்த பிரச்சனையை BSNL ஊழியர் சங்கம், DIRECTOR(HR)உடன் விவாதித்த போது, அதனை அவர் ஏற்றுக் கொண்டார். அதன் பின் நிர்வாகம் வேகமாக நடவடிக்கை எடுத்து, BSNL ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் அமலாக்குவதற்கான கடிதத்தை கார்ப்பரேட் அலுவலகம் வெளியிட்டுள்ளது. 

அதன் முக்கியமான அம்சங்கள்:-

1) இந்த திட்டம் “BSNL EMPLOYEES HEALTH INSURANCE POLICY-2021” என்று அழைக்கப்படும். இது 01.09.2021 முதல் அமலுக்கு வரும்.

2) ஊழியர்களுக்கு, ஊழியர், அவரது இணையர் மற்றும் 3 குழந்தைகள் கொண்ட குடும்பத்திற்கு பாலிசித் தொகை 5 லட்ச ரூபாய்கள்.

3) இதற்கான ஆண்டு ப்ரீமியம் தொகை ரூ.6,100+ 18% GST என மொத்தமாக ரூ.7,198/- வரும்.

4) பெற்றோரில் ஒருவர் என்றால் ப்ரீமியம் தொகை 9,000 ரூபாய் மற்றும் இருவர் என்றால் 9,600 ரூபாய்கள். இவர்களை போலவே மாமனார், மாமியார் ஆகியோரையும் சேர்த்துக் கொள்ளலாம்.

5) விருப்பப்படும் ஊழியர்கள் பாலிசி தொகையை 10 லட்ச ரூபாய் வரை உயர்த்திக் கொள்ளலாம்.

6) E5 ஊதிய விகிதத்திற்கு மேல் உள்ள அதிகாரிகளுக்கு பாலிசி தொகை 10 லட்ச ரூபாய்கள்.

7) தற்போதுள்ள BSNL MRS திட்டத்தோடு இந்த மருத்துவ காப்பீடும் இருக்கும்.

இந்த விஷயத்தில் வெகு வேகமாக செயல்பட்ட திரு அர்விந் வட்னேர்கர் DIRECTOR(HR), Sr.GM(Admn) மற்றும் இதர மூத்த அதிகாரிகளுக்கு BSNL ஊழியர் சங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

தோழமையுடன், 
E. கோபால்,
மாவட்ட செயலர் 

உத்தரவு காண இங்கே சொடுக்கவும்