BSNLEU மத்திய சங்கத்தின் தொடர் முயற்சியின் பலனாக, FTTH இணைப்பில் ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் 40% சலுகை வழங்கும் உத்தரவு இன்று (05.07.2021) வெளியாகியுள்ளது.
அதன்படி, மாதம் ரூ 300.00 வரை சலுகை வழங்கப்படும். உதாரணமாக, ரூ.599.00 பிளான் எடுத்தால், ரூ 240.00 சலுகை வழங்கப்படும். ரூ.1200.00 திட்டத்திற்கு மேல் ரூ.300.00 சலுகை வழங்கப்படும்.
ஏற்கனவே பிராட் பேண்ட் இணைப்பு வைத்திருந்தால், அதற்கு மாற்று இந்த இணைப்பு. குரல் அழைப்புகள் அனைத்து திட்டத்திலும் இலவசம் என்பதால், தரைவழி இணைப்பு Technical ஆக தொடரும். பணியில் உள்ள ஊழியர்களுக்கு டெபாசிட் கிடையாது. மோடம் நாம் தான் வாங்கி கொள்ளவேண்டும். Technical feasability அடிப்படையில் இணைப்பு வழங்கப்படும். BHARATH AIR FIBRE இணைப்புகளுக்கு இது பொருந்தும்.