திருச்செங்கோடு BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சார்பாக, தோழர் S. தமிழ்மணி, CVP., BSNLEU அவர்களுக்கு, திருச்செங்கோட்டில், 30.06.2021அன்று பணி நிறைவு பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு திரு P. பொன்ராஜ், DE., திருச்செங்கோடு அவர்கள் தலைமை தாங்கினார். திருச்செங்கோடு BSNLEU நகர கிளை செயலர் தோழர் C. ஆண்டியப்பன் வரவேற்புரை வழங்கினார்.
CITU மாவட்ட செயலர் தோழர் N. வேலுசாமி, CITU மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் A. ரங்கசாமி, BSNLEU சேலம் மாவட்ட செயலர் தோழர் E. கோபால், NFTEBSNL மாவட்ட தலைவர் தோழர் S. சின்னசாமி, BSNLEU மாவட்ட தலைவர் தோழர்S. ஹரிஹரன், BSNLEU மாவட்ட பொருளர் தோழர் P. தங்கராஜு உள்ளிட்ட தோழர்கள், தோழர் தமிழ்மணி அவர்களின் இலாக்கா இயக்க பணிகளை பாராட்டி வாழ்த்துரை வழங்கினார்கள்.
TNTCWU தமிழ் மாநில உதவி செயலர் தோழர் C. பாஸ்கர் மற்றும் சேலம் மாவட்ட செயலர் தோழர் M. செல்வம் ஆகியோர் ஒப்பந்த ஊழியர்கள் சார்பாக வாழ்த்துரை வழங்கினார்கள். ஓய்வு பெற்ற தோழர்கள் சார்பாக AIBDPA தோழர் K. ராமசாமி, தோழர் V. நாராயணன் (எடப்பாடி) வாழ்த்துரை வழங்கினார்கள்.
BSNLEU சேலம் மாவட்டசெயற்குழு உறுப்பினர்கள் தோழர் M. சண்முகம், மாவட்ட உதவி செயலர், தோழர் P. குமாரசாமி, மாவட்ட உதவி தலைவர், மாவட்ட அமைப்பு செயலர்கள் தோழர்கள் K. ராஜன், P. செல்வம், கிளை செயலர்கள் தோழர்கள் V. பரந்தாமன் ( பள்ளிபாளையம்) R. ரமேஷ் (பரமத்தி வேலூர்) P. சண்முகம் (எடப்பாடி) N. பாலகுமார் (GM அலுவலகம்), G.R.வேல்விஜய் (ஆத்தூர் ஊரகம்), A. கந்தசாமி (இளம்பிள்ளை) முன்னணி தோழர்கள் ஜோதி (மெய்யனுர்) ராஜகோபால் (நாமக்கல் நகரம்) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
தோழர் S. தமிழ்மணி ஏற்புரை வழங்கியபின், திருச்செங்கோடு ஊரக கிளை செயலர் தோழர் K. செல்வராஜூ நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார். தோழர் தமிழ்மணி குடும்பத்தார் , மற்றும் 100க்கும் மேற்பட்ட தோழர்கள் நிகழ்வில் திரளாக கலந்து கொண்டனர்.