“NATIONAL MONETISATION PIPELINE” NMP என்ற பெயரில், தேசத்தின் சொத்துக்களை இந்திய /வெளிநாட்டு கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்க மோடி அரசு அனுமதி -
27.08.2021 அன்று உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்துக!
தேசத்தின் சொத்துக்களை, இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் சூறையாட அனுமதிக்கும் மிகப்பெரிய நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. “NATIONAL MONETISATION PIPELINE (NMP)” என்ற பெயரில், தேசத்தின் சொத்துக்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்க்க மோடி அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அரசாங்க அறிவிப்பின் படி, 1.6 லட்சம் கோடி ரூபாய்கள் மதிப்புள்ள 26,700 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள், 1.5 லட்சம் கோடி ரூபாய்கள் மதிப்புள்ள 400 ரயில் நிலையங்களும் 150 ரயில்களும், 0.67 லட்சம் கோடி ரூபாய்கள் மதிப்புள்ள 42,300 கிலோமீட்டர் மின் தடங்கள், 0.32 லட்சம் கோடி ரூபாய்கள் மதிப்புள்ள 5,000 மெகாவாட் நீர்மின், சூரியஒளி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி சொத்துக்கள், 0.24 லட்சம் கோடி ரூபாய்கள் மதிப்புள்ள 8,000 கிலோ மீட்டர் தேசிய எரிவாயு குழாய் தடங்கள், 0.22 லட்ச ரூபாய்கள் மதிப்புள்ள IOC மற்றும் HPCLன் 4,000 கிலோமீட்டர் குழாய் தடங்கள், 0.35 லட்சம் கோடி ரூபாய்கள் மதிப்புள்ள பாரத்நெட்டின் 2.86 லட்சம் கிலோமீட்டர் ஃபைபர்கள் மற்றும் BSNL மற்றும் MTNLன் 14,917 டவர்கள், 0.3 லட்சம் கோடி ரூபாய்கள் மதிப்புள்ள 21 விமான நிலையங்கள் மற்றும் 31 துறைமுகங்கள், 0.3 லட்சம் கோடி ரூபாய்கள் மதிப்புள்ள 160 நிலக்கரி சுரங்க திட்டங்கள் மற்றும் 0.11 லட்சம் கோடி ரூபாய்கள் மதிப்புள்ள 2 விளையாட்டு மைதானங்கள் ஆகியவை, MONETISATION என்ற பெயரில், இந்திய மற்றும் அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்கப்பட உள்ளன.
BSNL நிறுவனத்தை 4G சேவை தர விடாமல் அரசு மறுப்பது ஏன் என தற்போது தெளிவாகி விட்டது. BSNLன் டவர்களை அரசு விற்பனை செய்ய விரும்புகிறது என்பது தானே தவிர வேறு எதுவுமில்லை. அடுத்ததாக, BSNLன் 7 லட்சம் கிலோமீட்டர் ஆப்டிக் ஃபைபர்களையும் அரசு விற்பனை செய்யும்.
அரசின் இந்த முடிவிற்கு உடனடியாக நாம் எதிர்ப்பு தெரிவித்தாக வேண்டும். 27.08.2021 அன்று மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என 25.08.2021 அன்று கூடிய BSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய மையக் கூட்டம் அறைகூவல் விடுத்துள்ளது. இந்த போராட்டத்தை வெற்றிகரமாக்கிட வேண்டும் என கிளை சங்கங்களை மாவட்ட சங்கம் கேட்டு கொள்கிறது.
போராட்ட காட்சிகளை படங்களாக மாவட்ட சங்கத்திற்கு அனுப்பி வைக்கவும்
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்
குறிப்பு:
சேலம் நகர கிளைகள் சார்பாக 27.08.2021 அன்று GM அலுவலகத்தில் மதியம் 12.30 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்