3வது ஊதிய மாற்றம் தொடர்பாக, ஹைதராபாத் மத்திய செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும், பொதுச்செயலரும், துணைப் பொதுச்செயலரும், DIRECTOR(HR)இடம் வழங்கினர். அதிகாரிகள் அல்லாத ஊழியர்களுக்கான 3வது ஊதிய மாற்ற பிரச்சனையை, முன்னாள் தொலை தொடர்பு அமைச்சர் திரு மனோஜ் சின்ஹா அவர்களிடமும், முன்னாள் தொலை தொடர்பு துறையின் செயலர் திருமிகு அருணா சுந்தரராஜன் அவர்களிடம் விவாதித்ததை தலைவர்கள் எடுத்து கூறினார்கள்.
ஊதிய மாற்ற ஒப்பந்தத்தை விரைவில் கையெழுத்திட வேண்டும் என அந்த இருவரும், BSNL நிர்வாகத்திற்கு வழிகாட்டினர். எனவே, அதிகாரிகள் அல்லாத ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நடத்திட வேண்டும் என நமது சங்கத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல் மத்திய மாநில சங்கங்கள்