BSNL ஊழியர் சங்கத்தின் கோரிக்கையை நிர்வாகம் ஏற்றுக் கொண்டது .
BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலரும், துணைப் பொதுச்செயலரும் 25.08.2021அன்று DIRECTOR(HR)ஐ சந்தித்து, சீரமைப்பு தொடர்பாக, ஹைதராபாத் மத்திய செயற்குழுவில் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தை வழங்கினர். விவாதத்தின் போது, BSNL ஊழியர் சங்கத்தின் கோரிக்கையான ATT கேடரை LIVE CADREஆக நீட்டிக்க நிர்வாகம் ஏற்றுக் கொண்டுள்ளதாக DIRECTOR(HR) தெரிவித்தார்.
மேலும், சீரமைப்பு தொடர்பாக நிர்வாகம் எடுத்துள்ள முடிவினை, ஓராண்டு காலத்திற்கு பின் பரிசீலனை செய்ய வேண்டும் என்ற BSNL ஊழியர் சங்கத்தின் கோரிக்கையையும், நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல் மத்திய மாநில சங்கங்கள்